நிட்டம்புவ,ரன்பொகுனுகம, அத்தனகலை உட்பட பல பிரதேசங்களில் சனியன்று நீர் வெட்டு
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (09) காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 10 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
நிட்டம்புவ, கந்தஹேன, மாபகொல்ல, கொங்கஸ்தெனிய, பின்னகொல்லவத்த, கொலவத்த, கோரக்கதெனிய, ரன்பொகுனுகம வீட்டுவசதித் திட்டம், படாலியா, அத்தனகல்ல, பஸ்யால, உரபொல, திக்கந்த, மீவிட்டிகம்மனய, மைம்புல, மாத்தலான, ஹக்கல்ல, அலவானா, கலல்பிட்டிய மற்றும் அலமுல்ல ஆகிய பகுதிகளுக்கு இத்தடை ஏற்படுமென தெரிவிக்கப்படுகின்றது.