உள்நாடு

கற்பிட்டி கண்டக்குழியில் நூறு கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத மருந்து வில்லைகள் கைப்பற்றப்பட்டது

கற்பிட்டி கண்டக்குழி குடா கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்வாடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூறு கோடிக்கும் அதிகமான பெறுமதி உடைய சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மருந்து வில்லைகளை கைப்பற்றிய கற்பிட்டி பொலிஸார்.

கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் ரன்வலராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது கற்பிட்டி கண்டக்குழி குடா கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட மீன்வாடிக்குள் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொதிகளை ஆராய்ந்து பார்த்த போது அதில் புற்று நோய்கள் மற்றும் ஏனைய நோய் நிவாரண மருந்து வில்லைகள் காணப்பட்டதாகவும் இதன் பெறுமதி நூறு கோடிக்கும் மேல் இருக்கலாம் என்பதுடன் இந்த மருந்து வில்லைகள் வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *