உள்நாடு

சிறப்பாக நடைபெற்ற ஹஜ் உம்ரா வழிகாட்டி நூல் வெளியீட்டு விழாவும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும்

தர்கா நகரைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளரும் எழுத்தாளருமான தேசபந்து ஸுஹைர் ஹாஜியார் எழுதிய ஹஜ் உம்ரா வழிகாட்டி நூல் வெளியீட்டு விழாவும், தர்கா நகர் இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டிலான மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் தர்கா நகர் ஸாஹிரா கல்லூரி நளீம் ஹாஜியார் மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

தர்கா நகர் அல்ஹம்ரா மகா வித்தியாலயம், ஸாஹிரா ஆரம்பப் பாடசாலை மற்றும் அளுத்கம வீதிய முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளிலும் கடந்த 2024 வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் இந்த நிகழ்வில் கௌரவித்து பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வுக்கு தேசிய நல்லிணக்க பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேருவளை அபிவிருத்திக் குழு தலைவருமான சந்திம ஹெட்டியாராச்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம் அஸ்லம் ஹாஜியார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.எம் அம்ஜத் ஹாஜியார், முன்னாள் தேசிய மருந்தாக்கக் கூட்டுத்தாபன தலைவர் கலாநிதி ரூமி ஹாசிம், தேசிய மக்கள் சக்தி களுத்தறை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அரூஸ் அஸாத் ஆகியோர் பங்குபற்றினர்.

அத்தோடு விசேட அதிதிகளாக பேருவளை நகர சபை தவிசாளர் மபாஸிம் அஸாஹிர், தர்கா நகர் ஸாஹிரா மஹா வித்தியாலய அதிபர் நிஸ்ரின் அஸ்கர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் ஹசீப் மரிக்கார், ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், வானொலி கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர், பெற்றோர்கள் நலம் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேருவளை பிராந்திய எழுத்தாளர் சங்க செயலாளர் பஸ்லி ஹமீட் நூல் விமர்சனம் செய்ததோடு பிரபல தொழிலதிபர் அம்ஜாத் டெரவல்ஸ் உரிமையாளர் அல் ஹாஜ் எச்.எம் அம்ஜதீன் நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.
தர்கா நகரைச் சேர்ந்த மூன்று முக்கிய பிரமுகர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.

தர்கா நகர் இஸ்லாமிய நலன்புரிச் சங்கம் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக ஆற்றிவரும் பணிகளை இங்கு பலரும் பாராட்டிப் பேசினர். இந்த அமைப்பை வழிநடாத்தும் ஏ.பீ.எம் ஸ_ஹைர் ஹாஜியாரின் சேவைகளையும் அதிதிகள் பெரிதும் பாராட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சிகளை சங்கத்தின் உப செயலாளர் அறிவிப்பாளர் பாஸி ஸ_பைர் நெறிப்படுத்தியதோடு சங்கத்தின் செயலாளர் இப்ராஹிம் இம்ரான், எம். ராஸிக் ஹாஜியார் உட்பட பலரும் பங்குபற்றினர்.

(பேருவலை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *