உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய “100 வாழ்க்கைப் பாடங்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று
தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க அறிஞர் உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று 6ஆம் திகதி பிற்பகல் 4.30 மணி முதல் 6.30 மணி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் அதிதிகளாக ஸம் ஸம் பவுண்டேஷன் தலைவர் முப்தி யூஸும் ஹனீபா, ஜாமியா நளீமியாவின் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம், பிரபல சமூக சேவையாளரும் நெஸ்ட் அகடமியின் தலைவருமான அல்ஹாஜ் எஸ்.எல்.எம்.பௌஸ் பேராதனை பல்கலைக்கழக வாய்வழி மற்றும் முகவாய் மருத்துவம் மற்றும் கதிர்வீச்சு துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். சித்தீக் ஆகியோர் கலந்துகொள்வதோடு அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முஹம்மத் பற்றிய ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
நூல் விமர்சனத்தை பிரபல குழந்தை நல வைத்தியர் டாக்டர் ரயீஸ் முஸ்தபா நிகழ்த்தவுள்ளார்.