உள்நாடு

இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் நல்லாட்சி காலத்தில் 55 பேருக்கு வழங்கிய நியமனங்கள் முறைகேடானது..! நீதிமன்றம் தீர்ப்பு..!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தில் நல்லாட்சிக் காலத்தில் இ.ஒ.கூ.த்தின் தலைவர்.பணிப்பாளர் சபையினால் கூட்டுத்தாபன சபையின் சேவையாற்றும் 55 பேர்களுக்கு 2015 காலப்பகுதியில் முறைகேடாக வழங்கிய பதவி உயர்வினை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கினை கொழும்பு நீதிமன்றம் அதனை முறையற்ற உயர்பதவிகள் வழங்கியதாக அதனை இடை நிறுத்தியுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் ஜாதிக்க சேவக சங்கத்தின் செயலாளர் பி.பி.எஸ் பேமசிரி மற்றும் தொழில்நுட்ப சேவக்க சங்கத்தின் செயலாளர் முதித் சிறிவர்த்தன ஆகியோர்கள் இணைந்து மேற்கொண்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கினை தொடர்ந்ததன் விளைவாக இப் பதவி உயர்வினை நேற்று 5 விசாரனை செய்த நீதிபதிகள் குழாம் இதனை உடனடி அமுலுக்கு வரும் வரை இப் உயர் பதவிகைள இடை நிறுத்தி அதனை முறைகேடான நியமனம் என தீர்ப்பு வழங்கியுள்ளது..

அத்துடன் இவ் முறைப்பாட்டாளர்களுக்கு வழக்கு செலவினம் 480000 ருபாவையையும் அப்போதைய இ.ஒ.கூட்டுத்தாபணத்தின் தலைவர் , மற்றும் பணிப்பாளர்களிடமிருந்து அறவிட்டு வழங்குமாறும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *