உள்நாடு

வெகு விமரிசையாக நடைபெற்ற சீனன்கோட்டை முத்துக்கள் வட்சப் குழுமத்தின் மாணவர் கெளரவிப்பு நிகழ்வு

பேருவளை சீனன் கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை மற்றும் நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளிலும் கடந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஒன்பது ஏ சித்தி பெற்ற (9A) மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சீனன் கோட்டை முத்துக்கள் வட்ஸ்ஸப் (Whatsup ) குழுமத்தின் ஏற்பாட்டில் (03.08.2025) ஞாயற்றுக்கிழமை சீனன் கோட்டை பெரேரா வீதியில் உள்ள மர்ஹூம் எம்.எஸ்.எம் பளீல் ஹாஜியாரின் இல்லத்தில் குழுமத்தின் தலைவர் ராமிஸ் நாசிம் தலைமையில் நடைபெற்றது.

பேருவளை நகர சபை உறுப்பினரும் குழுமத்தின் அங்கத்தவருமான அல்ஹாஜ் அஸாம் பளீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக இரத்தினக்கல் வர்த்தகர்களான அல்ஹாஜ் ராசிக் மர்ஜான், அல் ஹாஜ் முஹம்மத் கபூர், மக்கி நஜூமுதீன், ருமைஸ் ஹாஜியார், அல் ஹுமைசரா தேசிய பாடசாலை பிரதி அதிபர் எஸ். முஸம்மில், உப அதிபர் எம்.ரீ.எம் நைஸர், நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி பஹீமா பாயிஸ், சீனன் கோட்டை ஸகாத் அமைப்பின் தலைவர் அல் ஹாஜ் எம்.ஐ.எம் பாகிர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் அல் ஹாஜ் எம்.எப்.எம் ஹாரூன், குழுமத்தின் ஒழுங்கினைப்பாளர் ரொசான் பாயிஸ்
மற்றும் சீனன் கோட்டை முத்துக்கள் குழுமத்தின் உறுப்பினர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

குழுமத்தின் அங்கத்தவர் ஜே.எம்.எம் முஹம்மத் ஸாலி ஹாஜியார் குழுமத்தின் சமூக, கல்வி மற்றும் பொதுப் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறினார்.

இரு பாடசாலைகளிலும் 8A பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கும் பரிசில்களை வழங்க மேற்படி குழுமம் முன்வந்துள்ளன. நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியில் 8 A பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கான பணப் பரிசு தொகையை அதிபரிடம் இதன் போது கையளிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எமது பகுதி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக தொடர்ந்து பங்களிப்புச் செய்வதாக இங்கு உரையாற்றிய அல் ஹாஜ் அஸாம் பளீல் மற்றும் ராஸிக் மர்ஜான் ஆகியோர் உறுதியளித்தனர்.

அல் ஹுமைஸரா பிரதி அதிபர் எஸ். முஸம்மில், நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி அதிபர் பஹீமா பாயிஸ் ஆகியோர் சீனன் கோட்டை முத்துக்கள் (Whatsup) குழுமத்தின் சேவைகளை பாராட்டிப் பேசினர். விஷேடமாக கல்விப் பணிக்கு ஆற்றும் சேவைகளை பெரிதும் பாராட்டினர்.
நிகழ்வு இறுதியில் குழுமத்தின் சார்பில் -மாணவர்களுக்கு சான்றிதழுடன் பணப்பரிசும் அதிதிகளினால் கையளிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

(பேருவளை பீ. எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *