விற்பனை செய்வதற்கு சரியான சந்தை வசதி இன்மையால் சோளம் விவசாயிகள் அவதி
மகாவலி எச் வலயத்தில் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட சோள அறுவடையை நியாயமான விலையில் விற்பனை செய்ய முடியவில்லை என்றும் கருதுகளுடன் கூடிய சோளச்செடிகளை ஒரு கிலோகிராம் இருபத்தைந்து ரூபாய்க்கு கால்நடை தீவனமாக விற்க வேண்டியதுள்ளதாக கால் நடை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அதுல திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த ஆண்டு சோள அறுவடை வெற்றிகரமாக இருந்த போதிலும் அதை விற்பனை செய்வதற்கு சரியான சந்தை அல்லது சரியான விலை இல்லாததே காரணம் என்றும் திஸாநாயக்க தெரிவித்தார்.
மகாவலி எச் வலயத்தில் சோளம் பயிரிடப்பட்ட தாம் உட்பட விவசாயிகளின் நிலை குறித்து மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய திஸாநாயக்க.ஒரு கிலோ சோள விதைக்கு அரசாங்கத்தின் உத்தரவாத விலை 140 என்றாலும் ஒரு கிலோ விற்கு நான்கு காய்ந்த சோளக் கருதுகள் தேவைப்படுவது டன் நான்கு கருதுகளை 110 முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அந்த விலைக்கு விற்கப்படும் போது விவசாயி தனது இலக்கை இழக்கின்றார் அதற்காக அவர்கள் கூடுதலான காலத்தை செலவிட வேண்டியுள்ளது.
சோளம் கருதுகளை நன்கு உலர்த்தி அவற்றை நன்றாக நசுக்கி விதையாக்கி பின்னர் பைகளில் இட்டு கொடுக்க வேண்டும்.
எனவே விவசாயிகள் சோளச்செடிகளை கருதுகளுடன் சேர்த்து கிலோவுக்கு இருபத்தி நான்கு அல்லது இருபத்தைந்து ரூபாய்க்கு கால்நடை தீவனமாக விற்க வேண்டியுள்ளது. கால்நடை வளர்ப்பு நிறுவனங்கள் பண்ணைக்கு சென்று கிலோவுக்கு இருபத்தைந்து ரூபாய்க்கு சோள கருதுகளுடன் சோளச் செடிகளை ஏற்றிச் செல்வதாகவும் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)