உள்நாடு

மீண்டும் 155 பஸ் சேவை..! 11 முதல் ஆரம்பம்..!

மிக நீண்ட காலமாக கொழும்பில் சேவை இடை நிறுத்தப்பட்டிருந்த 155 இலக்க பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.30 மணி முதல் பஸ் சேவை ஆரம்பிக்கப்படும்.
155 ஆம் இலக்க பஸ் வண்டிகள், மட்டக்குளி தொடக்கம் நகர மண்டபம் (town hall) வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.
இ.போ.ச. மட்டக்குளி பஸ் டிப்போவினால், இச்சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென, பஸ் டிப்போ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *