வவுனியா பல்கலைக்கழகத்தின் நூலகத்தை திறந்து வைத்த பிரதமர் ஹரிணி
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய வவுனியா பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது, அவர் புதிதாகக் கட்டப்பட்ட நூலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில், பிரதமர் ஹரிணி அமரசூரிய உரையாற்றும்போது, பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்கள் அல்லது மாணவர் அரசியலில் ஈடுபடுவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், வன்முறை மற்றும் ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மன்னிப்பு வழங்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமரின் இந்த விஜயத்தின்போது, பல்கலைக்கழக கல்வி ஊழியர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சனைகள் குறித்தும் அவர் சிறப்பு கவனம் செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




