களுத்துறை மாவட்டத்தில் ஆர்.ஜே. மீடியா ஏற்பாட்டில் ஊடக செயலமர்வு
ஆர்.ஜே. மீடியா வலையமைப்பு, “முயற்சிக்கு என்றும் முதலிடம்” என்ற நாமத்தை மையமாகக் கொண்டு பல மாவட்டங்களை மையப்படுத்தி தலைமைத்துவம், ஊடகம், மருதாணிக்கலை மற்றும் அடிப்படை ஆங்கிலம் போன்ற பாடத்திட்டங்களை உள்ளடக்கியதான ஒரு நாள் செயலமர்வுகளை நடத்தி வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக, அப்பாடத்திட்டங்களை உள்ளடக்கிய ஒரு நாள் இலவச செயலமர்வு, அண்மையில் களுத்துறை மாவட்டத்தை மையப்படுத்தி பேருவளை லெஜெண்ட் கல்லூரியில் இடம்பெற்றது.
நிகழ்வில் வளவாளர்களாக ஆர்.ஜே. மீடியா வலையமைப்பின் பணிப்பாளரும் ஊடகப் பயிற்றுவிப்பாளருமான ஏ. எம். இன்ஷாப், ஆங்கிலத் துறை வளவாளராக அஸ்மி ஜுனைட் மற்றும் மருதாணிக்கலை வளவாளராக இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவியும் ஆர்.ஜே. மீடியாவின் நிகழ்ச்சி முகாமையாளரும் மருதாணிக் கலை பயிற்றுவிப்பாளருமான ஹஷ்மா ஷபீன் போன்றோர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கியமை சிறப்பம்சமாகும்.
“ஸஸூ” அகடமியின் பணிப்பாளர் பி.எம்.எப். பஸ்லா, பேருவளை லெஜெண்ட் கல்லூரியின் பணிப்பாளர் அஸ்ரி ஆப்தீன், பேருவளை லெஜெண்ட் கல்லூரியின் ஆங்கில வளவாளர் பி.எம். ரிம்ஸான் ஆகியோர் அதிதிகளாக பங்கேற்றிருந்த இச்சிறப்பு நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


( ஐ. ஏ. காதிர் கான் )