போதை வஸ்த்து பாவித்து பஸ் ஓட்டிச் சென்ற இ.போ.ச பஸ் சாரதி கைது..!
போதை வஸ்த்து பாவித்து பஸ் ஓட்டிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதி ஒருவர் நுவரெலியாவில் கைது செய்யப்பட்டார்.
நுலரெலியா பதுளை பிரதான வீதியிலுள்ள சீத்தாஎளிய எனும் இடத்திலேயே இந்த சாரதி கைது செய்யப்பட்டார்.
திவுலபிட்டி டிப்போவுக்குச் சொந்தமான இந்த பஸ் சாரதி தனது ஆசனத்தின் பின்னால் ஒருவகை கசிப்பு வடிவிலான போதைவஸ்த்தை போத்தலில் வைத்து தண்ணீர் குடிப்பது போன்று அருந்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக பஸ் பயணிகள் சகிதம் பொலிஸ் அதிகாரி ஒருவர் பஸ்ஸை நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார்.
இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
( ரஷீத் எம். றியாழ்)