உள்நாடு

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய தேடல் கருவியை அறிமுகப்படுத்தும் TikTok..!

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்படக்கூடிய அல்லது ஏற்கனவே பாதிக்கப்பட்ட பயனாளர்களுக்கு உடனடி உதவியும் முக்கிய ஆதரவும் வழங்கும் நோக்கில் TikTok நிறுவனம் புதிய தேடல் வழிகாட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய வசதி, TikTok தளம் அனைத்து பயனர்களும் பாதுகாப்பாக உணரவும், ஆதரவு பெறவும், தகவல் அறிந்திருக்கவும் உதவும் அதன் பரந்த பாதுகாப்பு முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இலங்கையில் பயனர்கள் ‘பாலியல் பலாத்காரம்’, ‘துஷ்பிரயோக உதவி இலக்கம்’, ‘ #Metoo’ போன்ற பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சொற்களைத் தேடும்போது, உள்ளூர் உதவி இலக்கங்களுடன் இணைக்கும் தனிப்பட்ட அறிவிப்புப் பலகை காண்பிக்கப்படும். மேலும், TikTok இன் பாதுகாப்பு மையத்தில் உள்ள பாலியல் துஷ்பிரயோக ஆதரவுப் பக்கத்திற்கும் வழிகாட்டப்படுவார்கள். இந்தப் பக்கம் கல்வி சார்ந்த உள்ளடக்கங்கள், வெளிப்புற புகார் அளிக்கும் வழிமுறைகள் மற்றும் தொழில்முறை ஆதரவு சேவைகளுக்கான நேரடி இணைப்புகளை வழங்குகிறது. இப்புதிய கருவி தொடர்பில் TikTok நிறுவனத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புப் பிரிவின் அவுட்ரீச் மற்றும் கூட்டாண்மை முகாமையாளர் Waskito Jati கருத்து தெரிவிக்கையில், ‘ TikTok இல், பயனர்களின் பாதுகாப்பே எங்களது முதன்மையான முன்னுரிமையாகும். கடினமான சூழ்நிலைகளில் பலர் இணையத்தள பயன்பாடுகளை நாடுகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். தீவிரமாக ஆதரவு வழிமுறைகளையும் நம்பகமான வளங்களையும் முன்னிறுத்துவதன் மூலம், மக்களை தொழில்முறை உதவிக்கு வழிகாட்டவும், பாலியல் துஷ்பிரயோகம் எந்த வடிவிலும்
பொறுத்துக்கொள்ளமுடியாதது என்ற எங்கள் கொள்கையை வலியுறுத்துகிறோம்.’ என
தெரிவித்தார்.
பாதுகாப்பு மையத்திலுள்ள பாலியல் துஷ்பிரயோக ஆதரவுப் பக்கமானது, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கங்கள் (CSAM), மனதளவில் மீண்டும் மீண்டும் நெருங்குதல் (grooming), பாலியல் துன்புறுத்தல் மற்றும் சம்மதமதமில்லாத பாலியல் செயல்பாடுகள் போன்ற பல்வேறு வகையான பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றி பயனாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மேலும், இத்தகைய உள்ளடக்கங்களை எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்த வழிகாட்டுதல்களையும் அளிக்கிறது. கூடுதலாக, தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன் தொடர்புகொள்வதை தவிர்க்குமாறு வலியுறுத்துவதுடன், பயனர் புகார்களை கையாள்வதில் TikTok இன் இரகசியத்தன்மையை வலியுறுத்துகிறது.
TikTok செயலியில் உள்ள புகார் அளிக்கும் வசதிகளுக்கு மேலதிகமாக, கிடைக்கக்கூடிய வெளிப்புற புகார் வழிமுறைகள் பற்றியும் பயனர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆதரவுப் பக்கம் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் தொழில்முறை உதவியை எளிதில் அணுக உதவுகிறது. இதில் பாதிக்கப்பட்டோர் மீண்டெழுதல், மன அதிர்ச்சி சிகிச்சை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற உள்ளூர் அமைப்புகள் மற்றும் சர்வதேச ஆதரவு வழங்குநர்களைக் கொண்ட தேடக்கூடிய தரவுத்தளமும் அடங்கும். மேலும், சமூக ஆதரவையும் அதிகாரம் பெறுதலையும் நாடுபவர்களுக்கு, குணமடைதல் மற்றும் மீட்சி தொடர்பான ஹேஷ்டேக்குகள் மற்றும் உள்ளடக்கங்களையும் TikTok முன்னிலைப்படுத்துகிறது.
இந்த முயற்சியானது சமூக வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துதல், கல்வி நிறுவனங்களுடனான கூட்டுறவு மற்றும் தளம் சார்ந்த தலையீடுகள் மூலம் டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் TikTok இன் தொடர்ச்சியான
முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டது. பயனர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் அதிகாரம் அளிக்கப்படுவதையும் உறுதிசெய்ய, TikTok நிபுணர்கள், பாதிக்கப்பட்டோர் பரிந்துரை அமைப்புகள் மற்றும் மனநல நிறுவனங்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுகிறது.


மேலதிக தகவலுக்கு, TikTok இன் பாதுகாப்பு மையத்தைப் பார்வையிடவும்: https://www.tiktok.com/safety/en/sexual-assault-resources

(எம் ரிஷாட்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *