உள்நாடு

வடக்கு தெற்கு பன்முக போக்குவரத்து மைய பணிகள் தொடர்பில் கலந்துரையாடல்

அனுராதபுரம் நகரில் பல வருடங்களாக தாமதமாகி வரும் வடக்கு மற்றும் தெற்கு பன்முக போக்குவரத்து மையம் ஆகிய வற்றின் பணிகளைத் தொடங்குவது தொடர்பான கலந்துரையாடல் வடமத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தற்போது மில்லியன் கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும்.புதிய பேருந்து முனையத்தில் அமைந்துள்ள தெற்கு பன்முக போக்குவரத்து மையத்தின் கட்டுமானப் பணிகளை விரிவுபடுத்துவது குறித்தும் தேவைப்பட்டால் கூடுதல் ஏற்பாடுகள் குறித்து நிதி அமைச்சுடன் கலந்துரையாடுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதற்கு தேவையான அவசர நடவடிக்கைகளை எடுக்கவும் அனுராதபுரம் மக்களுக்கு மிகவும் வசதியான முறையில் இந்த திட்டத்தை முடிக்கவும் முடிந்தவரை செலவினைக் குறைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய அரசாங்கத்தின் நியமனத்துடன் அனுராதபுரம் சந்தைப் பகுதியை மையமாகக்கொண்டு திறமையான போக்குவரத்து சேவைகளை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள வடக்கு பன்முகப் போக்குவரத்து மையத்தினை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தப் பகுதியுடன் தெடர்புடைய நிலங்களை ஒதுக்குவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் வழிகாட்டல்களை வழங்கவும் இந்த ஆண்டுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளை வழங்கவும் பன்முகப் போக்குவரத்து மையத்தின் செயற்பாடுகளைத் தொடங்கவும் வீதிப் போக்குவரத்து சேவைகள் அதிகார சபை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச கருத்து தெரிவிக்கையில்:- மாகாணத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக அத்தகைய இடங்களை உருவாக்குவதில் மாகாண சபையின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு திறம்பட ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன வீதி போக்குவரத்து அதிகார சபை தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *