சிட்டி ஒப் டிரீம்ஸ் 7 ஸ்டார் ஹோட்டல் பிரமாண்டமான விழாவுடன் ஆரம்பம்
இலங்கையில் இதுவரை கட்டப்பட்ட மிகப் பெரிய முதலீட்டுத் திட்டமாகும் இது தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த 7 ஸ்டார் ஹோட்டல் வளமாகவும் திகழும் சிட்டி ஒப் ரீம் -ஸ்ரீலங்கா City of Dreams of Sri Lanka அதன் பெருமைக்குரிய பயணத்தைத் தொடங்கியது. அதன் அங்குராப்பண நிகழ்வு பிரமாண்டமான விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது.
ஆடம்பரமும் உள்ளூர் வடிவமைப்பும் ஒன்றிணைந்த ஓரு தனித்துவமான இடமாக இந்த City of Dreams in Sri Lanka இலங்கையின் லட்சியங்கள் படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய தொலைநோக்கு பார்வையின் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஜோன் கீல்ஸ் மற்றும் மல்கம் றிசோட் அன்ட் என்டர்டைட்மன்ட் ஆகியவற்றின் வலுவான கூட்டு முயற்சியின் ஓர் மிகுந்த வெற்றிகரமான திட்டம் கொழும்பு சிட்டியில் அமையப் பெற்றுள்ளது. இக் ஹோட்டல் பற்றி ஜோன் கீல்ஸ் கம்பெனியின் தலைவர் கிருஷான் பாலேந்திரா கருத்து தெரிவிக்கையில்
நமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய தனியார் முதலீடாகும். இது ஒரு லட்சியமிக்க தேசிய தொலைநோக்கு பார்வையை உயிர்ப்பித்துள்ளது. இது ஒர் கட்டுமானத்தை விட மேலானது. பொருளாதார வளர்ச்சியை தூண்டும் நமது உலகளாவிய ரீதியில் இலங்கையின் தரத்தை உயர்த்தவும் எதிர்வரும் தலைமுறைகளை ஊக்குவிக்கும் ஒரு நவீன முன்நோக்கு 3 டி வடிவமைப்புடன் இலங்கை உள்ளூர் வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட ஓர் உலகம் தரம் வாய்ந்த ஹோட்டல் சிட்டி ஆப் சிறிலங்கா . என தெரிவித்தார்
மில்கோ றிசோட்ஸ் இன் தலைவர் லோரன்ஸ் ஹூ தெரிவிக்கையில் தெற்காசியாவில் இலங்கையின் அன்பு மற்றும் கலாச்சாரத்தை இணைத்து ஓர் கெசினோ வசதிகளை இயக்குவதில் ஆடம்பரம்.மற்றும் விருந்தோம்பலுக்குப் புதிய தரநிலைகளை அமைக்கும் அதே வேளையில் இலங்கையின் தனித்துவமான அடையாளத்தினை கொண்டாடும் ஓர் இடத்திற்கு பங்களிப்பு செய்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.
இத்திட்டத்திற்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் இடப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொழில் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். வெளிநாட்டு மூலதனத்தை இத் திட்டம் பெற்றுள்ளது.
இக் ஹோட்டல் 7 நட்சத்திரம் கொண்டவையாகும். தெற்காசியாவில் இலங்கையில் உள்ள முதலாவது ஹோட்டலாகும் இதில் தொடர்மாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. ஹோட்டல் 24 மாடிகளைக் கொண்டது. இரண்டு உலக முதல் தர வகுப்பினைக் கொண்ட ஹோட்டலாகும். சினமன் லைப், 680 அறைகளைக் கொண்டவையாகும். சுப்ப லக்சரி நுவா 137 அறைகளைக் கொண்டது.
17 உணவு உண்ணும் ரெஸ்டாரென்ட் களைக் கொண்டது.
கலாச்சாரம். மற்றும் களியாட்ட அறைகள், நீச்சல் தடாகம், கல்யாண மண்டபங்கள் , கூட்ட மண்டபங்கள், மசாஜ் நிலையம், உடற்பயிற்சி நிலையம். கெசினோ, குடி வகைகளைக் கொண்ட பார்கள், சீன, இந்தியா, இலங்கை மலேசியா அரபு நாடுகளின் உணவு வகைகள், கீழ் தளவாடியில் சொப்பிங் மோல், இவை இலங்கையின் நகர கிராமிய தரத்தில் ஹோட்டல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜோன் கீல்ஸ் 150 வரலாற்றினைக் கொண்ட வர்த்தக நிறுவனமாகும் இக்கம்பெனியின் ஹோட்டல்கள் இலங்கையில் மட்டுமல்ல மாலைதீவில் அமைய பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியா சீனா உல்லாசப் பிரயாணிகளே 10 வீதத்திற்கு மேலாக கடந்த காலங்களில் இலங்கைக்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஹோட்டல் திறப்பு விழாவுக்கு 01.08.2025 ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, நினைவு முத்திரை கீழ் தள சொப்பிங் மோல் திறந்து வைக்கப்பட்டன. 02.08.2025 இந்தியாவின் ஹோலிவூட் நடிகர் ஹிருந்திக் ரோஷன் ரெட் கார்பெட் நிகழ்ச்சியிலும் கெசினோவினையும் திறப்பு விழாவில் கலந்து கொண்டார் அத்துடன் வெளிநாட்டு களியாட்டம் கலைஞர்களும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இந் நிகழ்வினை ஊடக விளம்பரப்படுத்தலுக்காக இந்தியா, பாக்கிஸ்தான் மாலைதீவு போன்ற ஊடகவியலாளர்களும் இக் ஹோட்டல் திறப்பு விழாவுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













(அஷ்ரப் ஏ சமத்)