உள்நாடு

ஆத்மீகஞானி அஷ்ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் பெரிய மெளலானா ஞாபகார்த்த நிகழ்வு

இலங்கையில் ஷாதுலிய்யா தரீக்கா ஆன்மீக வழிமுறையை அறிமுகம் செய்து இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக இலங்கை திரு நாட்டில் அளப்பெரிய பணியாற்றிய ஆத்மீக ஞானி அஷ் ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் பெரிய மௌலானா (ரஹ்) அவர்களின் ஞாபகர்த்த கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவம் இலங்கையின் முதலாவது பள்ளிவாசலான வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலில் எதிர்வரும் 05 ஆம் திகதி (05.08.2025) செவ்வாய்க் கிழமை மாலை நடைபெறும்.

சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசல் பிரதம இமாம் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல் ஹாஜ் எம்.ஐ.எம் ரபீக் (பஹ்ஜி) தலைமையில் நடைபெறும் இம் மஜ்லிஸில் சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலி காலாபீட பணிப்பாளர் கலீபதுஷ் ஷாதுலி மௌலவி அல் ஹாஜ் எம்.ஜே.எம் பஸ்லான் (அஷ்ரபி – பீ.ஏ) ஆத்மீக ஞானி அஷ் ஷெய்க் முஹம்மத் ஸாலி பெரிய மௌலானா (ரஹ்) ஷாதுலிய்யா தரீக்காவின் வளர்ச்சிக்கு ஆற்றிய மகத்தான சேவைகள் குறித்து விஷேட சொற்பொழிவாற்றுவார்.

மஸ்ஜிதுல் அப்ரார் ஜமாஅத் சபைத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அல் ஹாஜ் எம்.ஏ.எம் ஹனபியின் வழிகாட்டலின் கீழ் பள்ளிவாசல் மற்றும் ஷாதுலிய்யா ஸாவிய்யா நிர்வாகிகளான அல் ஹாஜ் அதாஉல்லாஹ் அபூபக்கர், தேச கீர்த்தி அல் ஹாஜ் ஜாபிர் முஹம்மத் ஜே.பி, டாக்டர் எம்.எச்.எம் மர்ஜான், அல் ஹாஜ் முஹம்மத் மஸாஹிர் ஜெஸல், அல் ஹாஜ் எம்.எச்.எம் ஹஸைப், அல் ஹாஜ் பயாஸ் ஜஸல் ஜே.பி ஆகியோரின் மேற்பார்வையின் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அஸர் தொழுகையைத் தொடர்ந்து கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவமும் மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து வலீபா யாகூதிய்யா மஜ்லிஸம் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ஹழரா (திக்ர்) மஜ்லிஸம் அதனைத் தொடர்ந்து மார்க்கச் சொற்பொழிவும் இடம் பெறும்.
கலீமபாக்கள், உலமாக்கள், முகத்தமீன்கள், முன்ஷிதீன்கள், இஹ்வான்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றுவர்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *