முசல்பிடிய பஸ் விபத்தில் இளைஞர் பலி.
அனுராதபுரம் பாதெனிய வீதியில் முசல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்தனர்.குறித்த விபத்து நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.அனுராதபுரம் பகுதியில் இருந்து பாதெனிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் சென்ற கார் ஒன்றை முந்திச் சென்ற போது லொறியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.விபத்தில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுனரும் பின்னால் இருந்தவரும் படுகாயமடைந்த நிலையில் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனாவர்.இதன்பின்னர் பொறியின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)