மாருகொன வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “:ஆத்ம தரிசனம்” எனும் தொகுப்பு நூல் வெளியீடு

முதுபெரும் வானொலி
நாடக மற்றும் அரபு எழுத்தணிக் கலைஞரான காலஞ்சென்ற அல்ஹாஜ் ரைத்தலாவெல அஸீஸ்(ஜேபி) அவர்கள் எழுதித் தொகுத்த அல்லாஹ்வின் அழகிய 99 திருநாமங்களின் அரபு எழுத்தணி அலங்கார கலைகளைக் கொண்ட “:ஆத்ம தரிசனம்” எனும் தொகுப்பு நூல் வெளியீடு இக் கலைஞரின் குடும்ப உறுப்பினர்களது பங்களிப்புடன் உக்குவளை மாருகொன வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவரது ஞாபகமாக விரைவில் மாத்தளையில் நடாத்தவுள்ளது.
குறித்த இத்திருநாமங்களை அழகிய அலங்கார கலையாக வரைந்து அவைகளுக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம், ஆகிய மும்மொழிகளிலும் விளக்கம் கொடுக்கப்பட்டு கலாநிதி அனஸ் , மறைந்த கலைவாதி கலீல் , மறைந்த மாத்தளை பண்ணாமத்துக் கவிராயர் பாரூக் , உட்பட முக்கிய கலைஞர்கள் உலமாக்கள் வழங்கிய அணிந்துரைகளுடன் 60 பக்கங்களைக் கொண்டதாக இலங்கையில் அரபு எழுத்தணிக்கலை வரலாற்றில் முதற்தடவையாக இந்நூல் எழுதித் தொகுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அரபு எழுத்தணிக்கலை வளர்ச்சியில் அதிக ஈடுபாடுகாட்டிய இக் கலைஞர் ரைத்தலாவெல அஸீஸ் இந்நூலை வெளியிட்டுவைக்கவிருந்தவேளையில் இவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் 2013 ல் தனது 75 வது வயதில் காலஞ்சென்றார் இக்கலைஞர் பற்றியும் இவரது ஆக்கங்கள் பற்றியும் தகவலறிய வரும்புவோர் தொடர்புகொள்ளலாம்.
வாசிப்போர் ஒன்றியம்
இல.26/ C, மாருகொன
உக்குவளை
(உக்குவளை ஜலீல்)