கடலோர காவல்படையினரால் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்பு

திருகோணமலை நிலாவெளி உள்ள கோபாலபுரம் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது அலையில் சிக்கி அனர்த்தத்திற்கு உட்பட்ட மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கடலோர காவல்படையின் உயிர் காக்கும் குழுவினரால் வியாழக்கிழமை (31) மீட்கப்பட்டுள்ளனர்.
கோபாலபுரம் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது அலையில் அடித்து செல்லப்பட்ட மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கடற்கரையில் உயிர் காக்கும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள கடலோர காவல்படையின் உயிர் காக்கும் குழுவினர் அவதானித்துள்ளதுடன் உடனடியாக விரைந்து வந்து பல சிரமத்திற்கு மத்தியில் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மீட்டு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்து அவர்கள் தங்கி இருந்த சுற்றுலா விடுதியில் ஒப்படைத்துள்ளனர்
மீட்கப்பட்ட சுற்றுலா பயணிகளில் 10 மற்றும் 14 வயதுடைய இரண்டு குழந்தைகளும் 44 வயதுடைய ஒரு பெண்ணும் அடங்குவதாக வரும் இவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)