Monday, September 22, 2025
உள்நாடு

2028 வரை வற்வரியில் குறைப்பில்லை.

வற் வரி மற்றும் பொருட்களின் விலை குறைப்பை எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஐ.எம்.எப். இன் கொள்கைகளுக்கு இணங்கி கொண்டுள்ளதால், அதை மீறி செய்ய முடியாது. ஐ.எம்.எப் அவ்வாறு குறைப்பதற்கு அனுமதி அளிக்காது.நாங்கள் அரசாங்கத்தை எடுப்பதற்கு முன்னர் சர்வதேசத்தில் இலங்கையை வங்குரோத்தான நாடாகவே கருதினர். இலங்கையர்கள் என்றால் ஏலனமாகவே பார்த்தனர்.அவ்வாறு இருந்த நாட்டை நாம் செலிப்பானதாக மாற்றினோம். அண்மையில் சுற்றுலா செல்வதற்கு உலகில் அழகான தீவாக இலங்கையை அறிவித்துள்ளனர்.

எமது நாட்டின் திரைசேறியை செலிப்பாக்கி 2028ஆம் ஆண்டு ஐ.எம்.எப் இல் இருந்து நாம் வெளியேறும் காலமாகும். ஆனால் 2027ஆம் ஆண்டு வெளியேறத் திட்டம் தீட்டியுள்ளோம்.அப்போது வற் வரி மற்றும் பொருட்களின் விலையை குறைப்போம். நாம் படிப்படியாக அரசின் அநாவசிய செலவுகளை குறைத்து வருக்றோம். அதன் மூலம் மக்களுக்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *