பேருவளை நகர சபையின் கன்னி அமர்வு.

பேருவலை நகர சபையின் கன்னி அமர்வு நகரசபை கூட்ட மண்டபத்தில் (31.07.2025) நகரபிதா மபாஸிம் அஸாஹிர் தலைமையில் நடைப்பெற்றது.
ஆளும் கட்சியை சேர்ந்த 08 உறுப்பினர்கள் ஆரம்பக்கூட்டத்தில் கலந்துக்கொண்டதோடு ஆளும் கட்சியை சேர்ந்த நகரசபை உறுப்பினர் முஷ்பிர் சாபி வெளிநாடு சென்றுள்ளதால் அவர் கூட்டத்தில் பங்கு பற்றவில்லை. எதிர்க்கட்சியான சுயெட்சை குழுவைச் சேர்ந்த எந்த ஒரு உறுப்பினறும் கன்னி அமர்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியான சுயேட்சைக் குழுவில் 07 அங்கத்தவர்கள் உள்ளனர்.
சுயேட்சைக்குழு உறுப்பினர்கள்கூட்டத்திற்கு சமூகமளிக்காமைக்கான எந்த அறிவிப்பையும் தனக்குத் தெறிவிக்கவில்லை என நகர பிதா மபாஸிம் அஸாகிர் தெரிவித்தார்.இக் கூட்டத்தில் உப நகராதிபதி விமலஷிரீ ஸில்வா, நகர சபை உறுப்பினர்களான மஸாஹிம் மொஹம்மட், ஸெய்யிட் அஹமட், மல்லிகா ஜயந்தி ஸில்வா, எம்.என்.எம். இர்சாத், எம்.எப்.எம்.இசாம், றிஹானா ரவ்ப் ஜெஸ்மின் ஆகியோர் பல்வேறு யோசனைகளை இதன்போது முன்வைத்து உறையாற்றினர்.
நகர பிதா மபாஸிம் அஸாஹிர் உறையாற்றும் போது பேருவலை நகர சபையின் தலைவராக என்னை தெறிவு செய்ததை இட்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தலைவர் தெரிவின் போது ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 06 உறுப்பினர்கள் இந்த நகரின் முன்னேற்றம் கருதியும் மக்களின் பிரச்சினைகளை ஆளும் கட்சி அரசாங்கத்தின் மூலம் தீர்த்து வைக்க வேண்டியும் என்னை தெரிவு செய்தனர். அதற்காக நன்றி தெறிவிக்கிறேன். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கெட்டியராச்சி உட்பட தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளர் இப்திகார் ஜெமீல் உட்பட ஏனையோர்க்கும் விஷேடமாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பேருவலை நகரசபையூடாக மக்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுக்க ஆளும் கட்சி, எதிர் கட்சி என்ற பேதம் இல்லாமல் ஒன்றாய் இனைந்து செயல்படுவோம். எந்தவித கட்சி, இன, பிரதேச வேறுபாடுகள் இன்றி சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்க அனைவரும் என்னோடு ஒத்துழைக்க முன்வரவேண்டும் என்றார்.


(பேருவளை பீ.எம் முக்தார்)