சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியின் முன் வீதி, மருதமுனை ஸம் ஸம் வீதி ஆகியன மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியின் முன் வீதி, மருதமுனை ஸம் ஸம் வீதி ஆகியன மக்கள் பாவனைக்காக, அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் (30) திறந்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் PSDG திட்டத்தின் கீழ் ஒரு கட்டமாக சாய்ந்தமருது மற்றும் மருதமுனை பிரதேச மக்களின் நீண்ட நாள் கோரிக்கையில் ஒன்றான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள ஒஸ்மான் வீதியின் முன்வீதி மற்றும் மருதமுனையில் ஸம் ஸம் வீதி ஆகியன கொங்கிரீட் இட்டு புனரமைப்பு செய்யும் பணி அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் வேண்டுகோளின் பெயரில் ஓஸ்மான் வீதிக்கு 1.6 மில்லியன் செலவிலும் மருதமுனை ஸம் ஸம் வீதிக்கு 1.4 மில்லியன் செலவிலும் முழுமையாக செப்பனிடும் பணியானது நிறைவுற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ. டீ. எம். ராபீ, கல்முனை மாநகர பிரதி ஆணையாளர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் மற்றும் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது ஒத்துழைப்பு வழங்கிய, அனைவருக்கும் பொதுமக்களினால் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)