சாதாரண தரத்தில் ஏ 9 பெற்ற சீனன்கோட்டை மாணவர்களுக்கு முத்துக்கள் வட்ஸப் குழுமத்தால் கெளரவம்.

பேருவளை சீனன் கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை மற்றும் நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளிலும் கடந்த க.பொ.சாதாரண தர பரீட்சையில் ஒன்பது ஏ (9A) சித்தி பெற்ற மாணவர்களை கௌரவித்துப் பரிசளிக்கும் நிகழ்வொன்றை சீனன்கோட்டை முத்துக்கள் வட்ஸ்ஸப் (WhatsApp) குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.
இந் நிகழ்வு (03.08.2025) ஞாயிற்றுக்கிழமை மு.ப 10.00 மணிக்கு சீனன்கோட்டை பெரேரா வீதியில் உள்ள காலம் சென்ற மர்ஹூம் எம்.எஸ்.எம் பளீல் ஹாஜியாரின் இல்லத்தில் குழுமத்தின் தலைவர் ராமிஸ் நாசிம் தலைமையில் நடைபெறும்.
இந்நிகழ்வில் நகர சபை உறுப்பினரும் குழுமத்தின் அங்கத்தவருமான அல்ஹாஜ் அஸாம் பளீல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார். இரத்தினக்கல் வர்த்தகர் அல்ஹாஜ் ராசிக் மர்ஜான், அல் ஹுமைசரா தேசிய பாடசாலை அதிபர் முஹம்மத் பர்சான், நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி பஹீமா பாயிஸ், முன்னாள் அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை அதிபர் எம்.ஸீ இப்றாஹீம், சீனன் கோட்டை ஸகாத் கமிடி தலைவர் அல் ஹாஜ் எம்.ஐ.எம் பாகிர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் அல் ஹாஜ் எம்.எப்.எம் ஹாரூன், குழுமத்தின் ஒழுங்கிணைப்பாளர் ரொசான் பாயிஸ் மற்றும் சீனன்கோட்டை முத்துக்கள் குழும உறுப்பினர்கள் பலரும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.