கடலோரத்தின் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்க புதிய சட்டங்கள்.

நாட்டின் கடலோரப் பகுதிகளில் கட்டப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் விதிக்க சட்டங்களை இயற்றவுள்ளதாக கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர மேலாண்மைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுபோன்ற 2,500க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார தெரிவித்தார்.”கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில், கடலோர பகுதிகளில் ஏராளமான அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவற்றில் சிலவற்றை நாங்கள் அகற்றி வருகிறோம்.அவற்றில் சில ஆண்டுதோறும் மிக அதிக அபராதங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இந்த முறைகேட்டை இல்லாதொழிக்க தேவையான சட்ட நடவடிக்கையை நாங்கள் எடுத்து வருவதாக கடலோர மேலாண்மைத் திணைக்களம் இயக்குநர் தெரிவித்தார்.