கவிமாமணி” டாக்டர் ஜெயவீரன் ஜெயராஜாவின் “ஏழையின் தாஜ்மாஹால்”கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா
கொழும்பு கலை இலக்கிய ஊடக நண்பர்கள் நடத்தும்
“கவிமாமணி” டாக்டர் ஜெயவீரன் ஜெயராஜாவின் “ஏழையின் தாஜ்மாஹால்”
கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா “இலக்கியப் புரவலர்” ஹாசிம் உமர் முன்னிலையில் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத்தில்
03.08.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறும்.
இந்நிகழ்வில் வரவேற்புரையை ஊடகவியலாளர் கே. பொன்னுத்துரை நிகழ்த்த, வாழ்த்துரையை கவிஞர் சு. முரளிதரன் வழங்குவார்.
நூல் அறிமுகத்தை மேமன்கவி நிகழ்த்த, கருத்துரையை சட்டத்தரணி ஜெயபாரதி கிருஸ்ணா வழங்குவார்.
ஏற்புரையையும் நன்றியுரையைம் நூலாசிரியர் “கவிமாமணி” டாக்டர் ஜெயவீரன் ஜெயராஜா நிகழ்த்துவார்.