கடந்த ஆறு மாத காலத்துக்குள் இலஞ்சம் பெற்ற 34 அரச ஊழியர்கள் அதிகாரிகள் கைது
அரச ஊழியர்கள் அதிகாரிகள் கடந்த 6 மாத காலத்திற்குள் பொது மக்களிடமிருந்து லஞ்சம் பெற்ற காரணங்களுக்காக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025 ஜன-ஜூன் மாதம் வரை அரச திணைக்களங்கள், அதிகாரிகள் லஞ்சம் பெற்றதற்காக 34 பேர்கள் கைது செய்து விளக்கமறியலில் இட்டுள்ளனர். இதுவரை அரச ஊழியர்கள் பொது மக்களிடமிருந்து லஞ்சம் பெற்ற முறைப்பாடுகள் 3,022 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என இலஞ்சம் மற்றும் முறைகேடு சம்பந்தமான ஆணைக்குழு தெரிவித்தது.
இதில் 54 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு 34 பேர்கள் விளக்க மறியலில் உள்ளனர். அதில் 10 பொலிஸ் அதிகாரிகள் அடங்குகின்றனர். 5 அதிகாரிகள் நீதி அமைச்சு, 2 அதிகாரிகள் சுகாதார அமைச்சு, 2 அதிகாரிகள் இலங்கை போக்குவரத்துச் சபை, அத்துடன் இவர்களுடன் சம்பந்தப்பட்ட 6 சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025 ஜனவரி – தொடக்கம் ஜூன் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியாகும். 50 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன 60 அரச சந்தேக நபர்களுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் இவ்வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
இதுவரை 6 வழக்குகள் முடிவடைந்து தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன 273 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இலஞ்சம் மற்றும் முறைகேடு விசாரணை ஆணைக்குழு (Commission to investigate Allegations of Bribery or Corruption (CIABOC) குறிப்பிட்டுள்ளது.
(அஷ்ரப் .ஏ
சமத்)