கண்டி வாவியில் மிதந்து வந்த மனித சடலம்
கண்டி வாவில் மிதந்துவந்த மனித சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் நேற்று இரவு( 31) அல்லது இன்று அதிகாலையில் நிகழ்ந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இறந்தவர் ஊர்வலத்தில் பங்கேற்ற யானை பராமரிப்பாளர் என்றும், அவர் வாவியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு அவரது உடல் வாவியியில் வீசப்பட்டதா என்ற சந்தேகம் உள்ளது. இந்த மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பொலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(ரஷீத் எம். றியாழ்)