இசைமுரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழாவினை கொழும்பில் நடாத்துவது தொடர்பில் ஆலோசனைக் கூட்டம்..!
கொழும்பில் உலகம் அறிந்த இஸ்லாமிய இசை முரசு ஈ. எம். நாகூர் அனிபாவை கவுரவிக்கும் வகையில் அவரது நூறாண்டு விழாவை நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், மணிச்சுடர் ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோ அவரது இல்லத்தில் 30.07.2025
உலகம் அறிந்த இஸ்லாமிய இசை முரசு ஈ. எம். நாகூர் அனிபாவை கவுரவிக்கும் வகையில் அவரது நூறாண்டு விழாவை கொழும்பில் நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினர். இதில் அனைத்து முஸ்லிம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிற அக்டோபர் மாதம் விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த விழாவில் இந்தியாவில் முஸ்லிம் பாடகர்கள் மற்றும் சிலபேரை சிறப்பு விருந்தினராக அழைப்பது எனவும். இலங்கையில் இசை முரசு ஈ. எம். நாகூர் அனீபா பாடிய பாடல்கள் போட்டி வைப்பது என்பது உள்ளிட்டவை ஆலோசனை செய்யப்பட்டது. அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் நிசாம் காரியப்பா அவர்களுடன் இது விஷயமாக ஆலோசனை செய்யப்பட்டது
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)