பேருவளையில் இயங்கும் விஸ்டம் சர்வதேச பாடசாலை (விஸ்டம் வளாகம் Wisdom Campus )கேம்ரிஜ் ஆங்கில மொழி தகைமையினை வெளிக்கொணரும் மாபெரும் விழா

பேருவளையில் இயங்கும் விஸ்டம் சர்வதேச பாடசாலை (விஸ்டம் வளாகம் Wisdom Campus )கேம்ரிஜ் ஆங்கில மொழி தகைமையினை வெளிக்கொணரும் மாபெரும் விழா ஒன்று பேருவளை மாளிகாஹேன ஸேம் ரிபாய் ஹாஜியார் மகாவித்தியாலய தேசிய பாடசாலையின் ஷேஹ் முஸ்தபா (ரஹ்) ஞாபகார்த்த மண்டபத்தில் விஸ்டம் சர்வதேச பாடசாலை தலைவரும்,முகாமைத்துவப் பணிப்பாளருமான பௌஸர் ஹுஸைன்(நளீமி) தலைமையில் நடைபெற்றது.
மேற்படி விஸ்டம் சர்வதேச பாடசாலையும் சர்வதேச புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகமும் தத்தம் கல்வி நடவடி க்கைகளை பரஸ்பரம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.அந்த அடிப்படையில் கடந்த வாரம் பேருவளை சேம் ரிபாய் ஹாஜியார் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற விஸ்டம் ஏற்பாடு செய்த ஆங்கில மொழியின் உலகளாவிய மதிப்பீட்டை உரசிப் பார்க்கும் தகுதிகாண் வைபவத்திற்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறை மற்றும் மதிப்பீட்டு துறைகளில் புகழ்பெற்ற பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.
குறிப்பாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தெற்காசியாவின் பிரதான கணித முகாமையாளர் கெவின் கோய்ன்,கேம்ப்ரிட்ஜின் இலங்கை-மாலைதீவுகளுக்கான தலைமை பொறுப்பாளர் சஹாரா அன்சாரி,கேம்பிரிட்ஜ் கற்றல் சேவை முகாமையாளர் கீதா குமார ராஜா,ஸ்கில்ஸ் ஃபார்வைஃப் (தனியார்) நிறுவன அதிகாரி தயானி விஜயரத்ன,கேம்ரிஜ்மத்திய தேர்வு முகமையாளர் கோஷாலி டி.சில்வா உள்ளிட்டோருடன் விஸ்டம் சர்வதேச பாடசாலையின் முன்னணி நிர்வாக பணிப்பாளர் ஹாதிக் பௌஸர்,பணிப்பாளர் இஷ்பாக்,கல்வி பணிப்பாளர் மற்றும் மாணவர் விவகார உத்தியோகத்தர் அப்துல் காதர், கல்வி சார் தலைவர் டாக்டர் அஷ்பா ரமீஸ் ஆகியோருடன் விஸ்டம் கல்வி குழு இதர பாடசாலைகளின் அதிபர்கள்,தலைமை ஆசிரியர்கள்,கல்லூரி மாணவ மாணவிகள்,பெற்றோர்கள் என்று பெரும் திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விசேட சிறப்புரைகளோடு பலதரப்பட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இறுதியாக தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான பௌஸர் ஹுசைனின் நன்றியுரையுடன் வைபவம் நிறைவு பெற்றது.
(பேருவளை பீ.எம்.முக்தார்)