விளையாட்டு

புத்தளம் நகரை சேர்ந்த இரண்டு காற்பந்தாட்ட வீரர்கள் இலங்கையின் 19 வயதுக்கு உட்பட்ட தேசிய காற்பந்தாட்ட அணியில் இடம் பிடித்தனர்

புத்தளம் நகரை சேர்ந்த இரண்டு காற்பந்தாட்ட வீரர்கள் இலங்கையின் 19 வயதுக்கு உட்பட்ட தேசிய காற்பந்தாட்ட அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த அடைவானது புத்தளம் நகரத்திற்கு கிடைக்கப்பெற்ற ஒரு வரலாற்று சாதனையாகவே கருதப்படுகிறது.

19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணிக்கான வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு அண்மையிலே கொழும்பில் இடம்பெற்றது.

இதில் புத்தளத்தை சேர்ந்த மூவர் இறுதி சுற்றுக்கு முன்னேறி அதில் இந்த இருவரும் இலங்கை தேசிய அணி குழாமில் இடம் பிடித்துள்ளனர்.

முஹம்மது பஸீரத் மற்றும் முஹம்மது இர்பான் ஆகியோரே தேசிய அணியில் இடம் பிடித்த புத்தளம் நகரை சேர்ந்த இரண்டு வீரர்களாகும்.

இவ்விருவரும் புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் ஆவார்கள்.

2024 ஆம் ஆண்டு அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சுற்று தொடரில் 16 வயதுகுட்பட்ட போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற புத்தளம் வெட்டாளை அசன் குத்தூஸ் பாடசாலை அணியில் விளையாடி தொடரின் ஆட்ட நாயகனாக தெரிவானவரே முஹம்மது இர்பான் ஆவார்.

அதே தொடரில் கோல் காப்பாளராக கடமையாற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்ட முஹம்மது பசீரத் இன்று தேசிய அணியின் கோல் காப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ்விரு வீரர்களும் புத்தளம் நகரின் பிரபலமான லிவர்பூல் விளையாட்டு கழகத்தின் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *