சட்ட விரோத போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் அணி திரளுங்கள்; அமைச்சர் வசந்த சமரசிங்க
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சடாடவிரோத போதைப் பொருட்களை ஊக்குவிக்கவோ அல்லது பாதுகாக்கவோ எந்த அரசியல் தலையீடுகளும் இல்லாததால் நாட்டிலிருந்து சட்டவிரோத போதைப் பொருட்களை ஒழிக்க அனைத்து தரப்பினரும் அச்சமின்றி கைகோர்க்குமாறு வர்த்தக வணிக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாட்டிலிருந்து போதைப் பொருட்களை அகற்றுவதற்கான சிறப்பு குழுக்களை அமைப்பதற்கான நாடளாவிய ரீதியில் போதைப் தடுப்பு திட்டத்தின் அனுராதபுரம் மாவட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அனுராதபுரம் மாவட்ட சிறப்பு குழு கூட்டம் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்:- சமூகத்தின் குடிமக்களான நாம் அனைவருக்கும் இந்தப் பொறுப்புள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்றால் நமது பிள்ளைகளும் இது போன்ற சூழ்நிலைக்கு உருவாகலாம் என அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் மீது போதைப் பொருட்களின் தாக்கம் மற்றும் அதைத் தடுப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.பின்பற்ற வேண்டிய உத்திகள்,சமூக விழிப்புணர்வு, விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சங்கங்கள் மற்றும் குழுக்கள் உட்பட அனைத்து சமூக வழிமுறைகளையும் இந்த போதைப் பொருள் எதிர்ப்பு திட்டத்தில் எவ்வாறுசட்ட விரோத போதைப்பொருட்களை ஒழிக்க அனைவரும் அணி திரளுங்கள்.அமைச்சர் வசந்த சமரசிங்க. பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன, ஆளுநரின் இணைப்புச் செயலாளர், வீதி போக்குவரத்து அதிகார சபை தலைவர், வடமத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)