இரட்டைப் படைப்பு நூல் வெளியீட்டு விழா
தர்கா நகர் இளங்கலைப் பட்டதாரியான பஸ்மா ரிம்ஸான் மாணவியின் கன்னி முயற்சியான சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்பு நூல் 2025.08.09ம் திகதி நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய மண்டபத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவின் பிரதம அதிதியாக நஜீப் ஹாஜியார் கல்வி நிலையத்தின் தலைவர் கலாநிதி, தேசமான்ய, சமூக சேவையாளர் அல்-ஹாஜ் முஹம்மத் நஜீப் அமீர் ஆலிம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதோடு விஷேட அதிதியாக சிரேஷ்ட துறை வல்லுனர் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் எம்.பி.ஏ. மனித வள மேலாண்மை பி.பி.ஏ. இஸ்லாமிய நிதி மற்றும் வங்கித் துறை மேலாண்மைத் துறை டிப்ளோமா அல் ஹாஜ் முஹம்மத் நிஹ்மதுல்லாஹ் நஜீப் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அத்துடன் இன்னும் பல பிரமுகர்களும் கலந்து கொள்ள இருப்பது விஷேட அம்சமாகும்.
( பேருவளை பீ.எம்.முக்தார்)