வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரை அடையாளம் காண உதவுங்கள்..!
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர் ஒருவரை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் வேண்டிக் கொண்டுள்ளது.
இவ்வாறு, சிகிச்சை பெற்று வரும் நபர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய கமால்தீன் என்பவர் எனும் தகல் மாத்திரமே கிடைத்துள்ளது.
சுமார் 25 நாட்களுக்கு முன்னர் இந்நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பக்கவாதம் நோயினால் பாதிக்கப்பட்டு, பேச முடியாமல் காணப்படும் இந்நபர் பற்றிய தகவல் தெரியும் பட்சத்தில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் தொடர்பினை ஏற்படுத்துமாறு வைத்தியசாலை நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)