ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 2,250 கிலோ பீடி இலை பண்டல்களுடன் லாரி பறிமுதல்..!
ராமநாதபுரம் அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட 2,250 கிலோ பீடி இலை பண்டல்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், வெள்ளரிஓடை கடற்கரை பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு பீடி இலை பண்டல் கடத்தப்பட உள்ளதாக ராமநாதபுரம் க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் செவ்வாய்க்கிழமை காலையில் போலீசார் வெள்ளரி ஓடை கடற்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த ஒரு கண்டெய்னர் மினி லாரியை மறித்தனர். போலீசாரை கண்டதும் சிலர் கடலில் தயார் நிலையில் இருந்த படகுமூலம் கடலுக்குள் தப்பி ஓடினர்.
நிறுத்தப்பட்ட லாரியை
சோதனை செய்ததில் அதில் மூடைகளில் பீடி இலை இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பீடி 2,250 கிலோ இலைகளையும் . கண்டெய்னர் லாரியையும் க்யூ பிரிவு போலீசார் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
மேலும் கடத்தல்காரர்களை க்யூ பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)