உள்நாடு

தேசிய பிறப்புச் சான்றிதழ் டிஜிட்டல் மயமாக்களின் அனுராதபுர ஆரம்ப நிகழ்வு..!

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் செயல்படுத்தப்படும் தேசிய பிறப்புச் சான்றிதழ் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் அனுராதபுரம் மாவட்ட முன்னோடித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வர்த்தக , வணிக , உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் தம்புத்தேகம பிரதேச செயலகத்தில் (29) நடைபெற்றது.

இதன் போது ஆரம்ப நாள் நிகழ்வை குறிக்கும் வகையில் 25 குழந்தைகளுக்கு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க, தலாவ  பிரதேச சபை தவிசாளர் டி.எம். கருணாசேன திஸாநாயக்க , பிரதி தவிசாளர் பி.எம்.ரோஹன குமார, கல்நேவ பிரதேச சபை தவிசாளர் ஏ.டப்ளியூ  . ஏ. நிமல் அபேசேகர , பிரதி தவிசாளர் எச்.கே.எம்.ரோஹன விஜேகுமாரசிங்ஹ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அனுராதபுரம்  மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய பதிவாளர் நாயகம் டபிள்யூ . ஆர்.ஏ.என்.எஸ்.விஜயசிங்க வடமத்திய மற்றும் மேல் மாகாண வலயங்களுக்கு பொறுப்பான துணைப் பதிவாளர் நாயகம் எச்.எம்.டி.சி.ஹேரத் , தம்புத்தேகம பிரதேச செயலாளர் சுமித் கே.சோமரத்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *