காஸா விவகாரத்தில் மோடியின் மெளனம் வெட்கக்கேடானது.போட்டுத் தாக்கும் சோனியா காந்தி..!
காசா விவகாரத்தில் மோடி அரசு மௌன பார்வையாளராக இருப்பதை கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். இஸ்ரேல் – காசா இடையே கடந்த2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 17,000 குழந்தைகள் உட்பட 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் அட்டூழியங்களுக்கு ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்காமல் மோடி மவுனம் காப்பது வெட்கக்கேடானது, கோழைத்தனமாது.
பிரதமர் மோடியின் செயல் ஏமாற்றம் அளிக்கிறது. காசா – இஸ்ரேல் விவகாரங்களில் ஒன்றிய அரசு குரல் கொடுக்க வேண்டும். மவுன பார்வையாளராக இருப்பதை இனிமேலாவது கைவிட வேண்டும். மக்களுக்கு எதிரான செயல்களை செய்யும் இஸ்ரேல் அரசை இந்திய அரசு கண்டிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவிகள் செய்யப்பட வேண்டும். மோதல்களை தடுத்து நிறுத்தி அமைதியை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.