ஓகஸ்ட் 6 வரை பிரியந்த ஜெயக்கொடி க்கு விளக்கமறியல்..!
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் நேற்று (28) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல் பத்தர பத்மே தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பொய்யான முறைப்பாடு அளித்தமை தொடர்பிலேயே முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி கைது செய்யப்பட்டார்.