இந்திய தாக்குதலை யாரும் நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் நிறுத்துமாறு கதறியது..! -மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி
பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்ததாகவும், ஆனால், இந்திய மக்களின் ஒற்றுமை அதனை முறியடித்ததாகவும்.’ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் இந்தியாவின் பதிலடியை தடுக்க முடியவில்லை,”
இந்திய தாக்குதலை யாரும் நிறுத்தச் சொல்லவில்லை; பாகிஸ்தான்தான் நிறுத்துமாறு கதறியது என்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இந்தியா தரப்பில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விரிவாக விவாதம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி திங்கள்கிழமை விளக்கம் அளித்து பேசினார். இதனை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் பற்றி அவையில் செவ்வாய்க்கிழமை மாலை பேசினார். இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான எம்.பி. பிரியங்கா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் அவையில் செவ்வாய்க்கிழமை பேசினர்.
இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இரவு 6.30 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பேசியதாவது :
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் நிலை என்ன என்பதை விளக்க வந்தள்ளேன். நாட்டிற்காக இந்த அவையில் உரையாற்றுகிறேன்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், ஏப்ரல் 22-ந்தேதி, அப்பாவி மக்களின் மதம் என்னவென்று கேட்டு விட்டு, அவர்களை பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற சம்பவம் கொடூரம் வாய்ந்தது. அது கொடூரத்தின் உச்சம். இந்தியாவை வன்முறை தீயில் தள்ளுவதற்கான நன்றாக திட்டமிடப்பட்ட முயற்சி.
இந்தியாவில் வன்முறைகளை பரப்புவதற்கான சதி திட்டமே இது. அந்த சதி திட்டம், ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டு உள்ளது என்பதற்காக நான் நாட்டு மக்களுக்கு இன்று நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.ஏப்ரல் 22-ந்தேதி நான் வெளிநாட்டில் இருந்தேன். உடனடியாக நான் நாடு திரும்பினேன். திரும்பி வந்ததும், கூட்டம் ஒன்றை தலைமையேற்று நடத்தினேன். அப்போது, இது நம்முடைய தேசம் தொடர்பான விசயம். பயங்கரவாதத்திற்கு சரியான பதிலடி தரப்பட வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்தினேன்.
இந்திய மக்களுக்கு எதிரானவர்களிடம் கண்ணாடியை காட்டுவேன். ஆபரேஷன் சிந்தூரின் பின்னணியை அறியாமல் இருளில் உள்ளவர்களுக்கு விளக்கம் தருகிறேன். பஹல்காம் தாக்குதல் மனிதாபிமானத்தின் மீதான கொடூர தாக்குதல். மதத்தின் பெயரால் அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அத்தகைய பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட உறுதிபூண்டுள்ளோம். ‘அவர்கள் யோசிக்க முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக் கட்டுவோம்’ என்று கூறியிருந்தேன். அதன்படி பதிலடி தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்து இருந்தோம்.நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிறைவேற்றிவிட்டதாகவும், இந்திய மக்களின் நலன்களை விரும்பாதவர்களை கண்ணாடியாகக் காட்ட விரும்புவதாகவும் மோடி குறிப்பிட்டுப் பேசினார்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் அச்சமடைந்துள்ளது.
என் மீது நம்பிக்கை கொண்ட 140 கோடி இந்தியர்களுக்கும் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடி பணியாது. அந்த மிரட்டல் இனி எடுபடாது. இந்தியா ஒருபோதும் பயப்படாது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளோம். பதிலடி தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தோம். அது பெரும் பலன் அளித்தது.
நமது ஆயுதப்படைகள் மீது முழு நம்பிக்கை உள்ளது. எப்படி திட்டமிட்டோமா அந்தளவு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது பாகிஸ்தானால் இந்திய பதிலடியை தடுக்க முடியவில்லை.
பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகள் எங்கு மறைந்து இருந்தனரோ அங்கு தாக்குதல் நடத்தி அழித்தாம். பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானால் இனி அணு ஆயுதஅச்சுறுத்தல் விட முடியாது.இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட டிரோன்கள், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு, பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. முப்படைகளும் கூட்டாக இணைந்து திட்டமிட்டு செயல்பட்டன. அந்நாட்டின் விமான தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.
பஹல்காம் தாக்குதலில் மதத்தின் பெயரால் சதி நடந்தது. மதத்தின் பெயரைக் கேட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்தும் சதித்திட்டத்துடன் அவர்கள் இதனை அரங்கேற்றினர். ஆனால், பாகிஸ்தானின் சதியை இந்திய மக்களின் ஒற்றுமை முறியடித்தது.
பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக்காட்டுவோம். பயங்கரவாதிகளே யோசித்துப்பார்க்காத அளவுக்கு அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படும்.
இந்திய மக்கள் நலன்களை விரும்பாதவர்களை கண்ணாடியாக காட்ட விரும்புகிறேன். இந்தியாவின் பதில் தாக்குதலை பாகிஸ்தானால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் இனி எடுபடாது; இந்தியா ஒருபோதும் அதற்கு பயப்படாது”
ஐ.ந. உள்பட பல உலக நாடுகளில் இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பாகிஸ்தானுக்கு ஒட்டுமொத்த உலக நாடுகள் 193ல், சீனா, துருக்கி என வெறும் 3 நாடுகளின் ஆதரவுதான் கிடைத்தது. ஆனால், இந்தியாவுக்கு 190 நாடுகளின் ஆதரவு கிடைத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துவிட்டோம். இந்த தாக்குதலை பாகிஸ்தான் பல ஆண்டுகளுக்கு மறக்க முடியாது.
இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூரில் 100 சதவீத இலக்கை எட்டியது. ஆனால், மோடி தோற்றுவிட்டார் எனக் கூறி காங்கிரஸ் மகிழ்ச்சி அடைந்தது. எதிர்க்கட்சி அனைவரும் என்னையே குறி வைத்துத் தாக்குகிறார்கள். என்னை தாக்குவதில் குறியாக உள்ளனர். தேசத்தின் சக்தியை குறைத்து மதிப்பிட்டனர்.
இந்தியா மீதும், ராணுவ வலிமை மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. இந்தியாவுக்கு உலகின் மொத்த ஆதரவும் கிடைத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை.பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரை இந்தியா நிச்சயம் தாக்கும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்ட உண்மையாக உள்ளது.
எதிர்க்கட்சிகள் சொல்லும் கருத்துகள் பலவும், இந்திய எல்லையைத் தாண்டி வெளியே இருந்து வருவது போல ஒத்திருக்கிறது. ஒரே இரவில் பாகிஸ்தானுக்கே சென்று இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பினர்.
ஆனால், எங்கே சென்றது 56 இன்ச் நெஞ்சு என்று காங்கிரஸ் கட்சியினர் நையாண்டி செய்கிறார்கள். எப்போதுமே மக்கள் மனங்களை காங்கிரஸால் வெல்ல முடியாது. எப்போதுமே ஆபரேஷன் சிந்தூரின் இலக்குகள் தெளிவாக இருந்தன.
பாகிஸ்தான் விமான தளங்களில் கடும் பாதிப்பை உருவாக்கியது இந்திய பாதுகாப்புப் படை. இந்தியாவின் தற்சார்பு தொழில்நுட்பங்கள் சிறப்பாக செயல்பட்டன. பயங்கரவாதிகளையும் அதை ஆதரிக்கும் நாடுகளையும் பிரித்துப்பார்க்க முடியாது.
இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது வெறும் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானை ஆதரித்தன், 190 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை. இந்திய தாக்குதலை யாரும் நிறுத்தச் சொல்லவில்லை பாகிஸ்தான்தான் நிறுத்துமாறு கதறியது இது தான் உண்மையாகும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட டிரோன்கள், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு, பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. முப்படைகளும் கூட்டாக இணைந்து திட்டமிட்டு செயல்பட்டன. அந்நாட்டின் விலமான தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது. என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்
(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)