உள்நாடு

Business global award விருது பெற்ற 100 பேர்..!

இவ் ஆண்டின் Business Global Award and BGIA Excellency சிறந்த பத்திரிகைகள் , தொழிலதிபர்கள், சமூக சேவையாளர்கள், சமூக சேவை சங்கங்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியலாளர்கள் இசை, கலைஞர்கள், நடனம், வடிவமைப்பாளர்கள் 100 நபர்களுக்கு . விருது வழங்கும் வைபவம் 27.07.2025 கொழும்பு 7 விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் மண்டபத்தில் இந்நிறுவனத்தின் உப தலைவர் சரிப் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் முஜிபு ரஹ்மான் (பா.உ) இந்திய தமிழ் நடிகர் விஜய் விஸ்வா, சர்ஜூன் அபுபக்கர் . முன்னாள் மாகாண அமைச்சர், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அனுசரணையாளர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு இவ் விருதுகளை வழங்கி வைத்தனர்

இவ் ஆண்டின் சிறந்த பத்திரிகையான தினகரனுக்கு மற்றுமொறு விருது பிசினஸ் குலோபல் விருது 2025 கிடைக்கப் பெற்றது. இப் பத்திரிகையின் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார் அவ் விருதினை அதிதிகளிடமிருந்து பெற்றுக் கொணடார் தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(அஷ்ரப் ஏ சமத்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *