போதை மாத்திரை உட்கொண்ட கொழும்பு பிரபல பாடசாலை மாணவிகள்..! பொலிசார் விசாரணை..!
கொழும்பின் பிரபல்யமான தொரு பாலிகா பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை அருந்தியதையிட்டு மருதானை பொலிஸார் மாணவிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்……
இம் மாணவிகள் இரு மாணவியே இம் மாத்திரிகைகளை மட்டக்குழி மல்வத்தை எனும் பிரதேசத்திற்குச் சென்று அங்கு ஒர் நபரிடம் அடிக்கடி வாங்கி பாடசாலைக்கு கொண்டு வருவதாகவும் விசாரணையின்போது தெரியவந்தது.
மேற்படி மாணவிகள் ஏற்கனவே 2 குளிசைகள் பின்னர் 3 குளிசைகளை பாடசாலையின் கழிப்பு அறைக்குச் சென்று இதை அருந்துவதாகவும் இதனை அறிந்த பாலிகா அதிபர் மருதானை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து அறிவித்த பின்னர் இம் மாணவிகள் 5 பேரையும் போலீசார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர் அப் பாடசாலையின் பெயர் பொலிஸார் தெரிவிக்க வில்லை.
(அஷ்ரப் ஏ சமத்)