கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வு..!
கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் இம்முறை வெகு சிறப்பாக கற்பிட்டி பனாகோ உள்ளக விளையாட்டரங்கில் பாலர் பாடசாலையின் அதிபர் எஸ்.எம் அரூஸியா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் அதிகளாக முன்னாள் வலய கல்வி பணிமனையின் உடற் கல்வி பணிப்பாளர் எஸ் டி. பைறுஸமான் மற்றும் அந்நூர் பாலர் பாடசாலையின் தலைவர் எஸ்.எம் நியாஸ்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் சிறப்பாக இடம்பெற்ற இவ்விளையாட்டு போட்டி நிகழ்ச்சிக்கு பாலர் பாடசாலையின் ஆசிரியர்களின் முயற்சியுடன் பெற்றோர்களின் பங்களிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)





