உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கல்..!
கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
ஒன்றியத்தின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்முனை ஸாஹிரா கல்லூரி,அல் மிஸ்பா மகா வித்தியாலயம், அல் பஹ்ரியா மகா வித்தியாலயம், மஹுமூத் மகளிர் கல்லூரி, மற்றும் சாய்ந்தமருது மல்ஹறுஸ் ஸம்ஸ், அல் ஜலால் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த 37 மாணவர்களுக்கு இப் புலமை பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண நட்புறவு ஒன்றியத்தின் உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள், உட்பட பலரும் கலந்து கொண்டதாக ஒன்றியத்தின் பணிப்பாளர் யூ. எல்.எம். பைஸர் தெரிவித்தார்.
(றிபாஸ்)




