Ambulance சேவையின் கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை..!
வைத்தியசாலைகளின் சேவைகளை மேம்படுத்தி பொதுமக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் வைத்தியசாலைகளில் சேவையில் ஈடுபடும் Ambulance களின் பராமரிப்பு மற்றும் சேவை தொடர்பில் ஆராயும் பொருட்டு Ambulance களை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியுமான டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் தலைமையில் பிராந்திய உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம், பிராந்திய மருந்தாளர் திருமதி எஸ்.இந்திரகுமார் உள்ளிட்ட குழுவினர் குறித்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
நோயாளர்களின் நலன்கருதி Ambulance சேவைக்கான கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலே இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஆதம்)





