கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர் விடுதிகள் ஆளுனரால் திறந்து வைப்பு..!
கலென்பிந்துனுவெவ கல்வி வலயத்திற்குட்பட்ட கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் மாணவர் விடுதிகளை வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச வினால் மற்றும் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மாணவர் விடுதிக்காக அரசாங்கம் சுமார் 50 இலட்சம் ரூபாய்களை வழங்கியுள்ளது.
மாணவர் விடுதிக்காக 65 இலட்சம் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதுடன் இதற்கான மேலதிக நிதி பங்களிப்பை கே.எம்.ஜீ.எம்.அஸ்மி மற்றும் ஏ.எஸ்.ஜியாத் என்ற இரண்டு உள்ளூர் தொழிலதிபர்களும் வழங்கியுள்ளனர். இந்தப் பகுதி வாசிகள் இதற்காக ஒரு நிலத்தை வழங்கியுள்ளனர். மேலும் குறித்த இரு விடுதிகளிலிலும் 80 மாணவர்கள் தங்குவதற்கு வசதிகள் உள்ளன.
இந்த இரண்டு மாணவர் விடுதிகளும் கையகப்படுத்தப்பட்டதன் மூலம் கல்லூரியில் இருந்த ஒரு பாரிய பற்றாக்குறை நிரப்பப்பட்டுள்ளது. கலாவெவ ,கெக்கிராவ , நாச்சியாதீவு , ஹொரவப்பொத்தானை மற்றும் இக்கிரிகொல்லாவ போன்ற தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் உயர்தரம் கல்வி கற்பதற்காக இந்துக்கல்லூரிக்கு வருகின்றனர்.
இதுவரை அவர்கள் அருகிலுள்ள வீடுகளில் தங்கி நின்று கல்வி கற்பதற்காக பணம் செலுத்தி வந்துள்ளனர்.மேற்கொண்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் உயர்தர கணிதம் மற்றும் அறிவியல் கற்பதற்கு இந்தக்கல்லூரிக்கு வருகின்றார்கள். இந்த கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் கல்லூரி அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ பகுதியில் மட்டுமல்ல அனுராதபுரம் மாவட்டமெங்கும் முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யமான கல்லூரியாகும்.
இந்த கல்லூரி நிறுவப்பட்ட 73 வது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் விழாவும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் வசந்த ஜினதாச கருத்து தெரிவிக்கும் போது 1800 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் மக்கள் எங்களுடன் கைகோர்த்தார்கள் அன்றிலிருந்து நாம் அனைவரும் வலுவான சகோதரத்துவத்துடன் இலங்கை தேசத்தில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றோம். அந்த சகோதரத்துவத்தை பாதுகாக்கும் வகையில் நாம் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.எச்.எஸ்.கே.ஜயலத் , ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த ரத்நாயக்க, மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.ஏம்.டபிள்யூ. சமரகோன் கலென்பிந்துனுவெவ வலயப் பணிப்பாளர் இமாலி ரந்திகா நகந்தல, நன்கொடைகள், பிரதேச மக்கள்,கல்வுத்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)