உள்நாடு

வட மத்திய மாகாண சுபாஷிதா பாடசாலை சிறப்பு விருது விழா..!

சுபாஷிதா ” பாடசாலை சிறப்பு விருது 2025  வழங்கும் விழா வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு மாகாண கல்வி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வடமத்திய மாகாணத்தின் கல்வி  வளர்ச்சியை இலக்காகக் கொண்டு மாகாணத்தில் கல்வி நிலையை மேம்படுத்த பாடசாலையில் கிடைக்கும் மனித மற்றும் பெளதீக வளங்களை நிர்வாகிப்பதன் மூலம் கல்லியில் தர மேம்பாட்டை அடையும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும். இந்த நோக்கத்திற்காக அச்சிடப்பட்ட ” சுபாவிதாயா பாடசாலை சிறப்பு நடைமுறையில் உள்ள அணுகுமுறை” என்ற புத்தகம் ஆளுநர் வசந்த ஜினதாச விடம் வழங்கப்பட்டது.

மாகாணத்தில் சிறந்து விளங்கிய பாடசாலைகள் இங்கு மதிப்பீடு செய்யப்பட்டதுடன் மேலும் சிறந்த நடைமுறைகளுக்கான ஒரு அணுகுமுறை என்ற புத்தகம் இதில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் என்.எச் ஆர்.நிஷாந்த , கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி  செயலாளர் திலின அயோமி பதிரனகே,  மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏம்.டபிள்யூ . சமரக்கோன் , வலயக் கல்விப்பணிப்பாளர்கள் , பிரதி கல்விப் பணிப்பாளர்கள் ,  அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என  பலரும் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *