கற்பிட்டி பிரதேச தேசிய இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஐந்தாவது முறையாகவும் சனீர் சஜான் தெரிவு..!
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் கற்பிட்டி பிரதேச இளைஞர் சம்மேளனத்திற்கான 2025 ம் ஆண்டிற்கான புதிய தலைவர் தெரிவு கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.ஆர் முனாஸ் தலைமையில் இடம்பெற்றது
இந்நிகழ்வின் விஷேட அதிதிகளாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் புத்தளம் மாவட்ட இளைஞர் இணைப்பாளர் திருமதி நிபுனா, தேசிய இளைஞர் சேவை மன்ற புத்தளம் மாவட்ட காரியாலய பிரதி பணிப்பாளர் ரோஹிணி ஹேம மாலா ஆகியோர் கலந்து கொண்டதுடன் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 31 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் கழக நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன்படி 2025 ம் ஆண்டிற்கான கற்பிட்டி பிரதேசத்தின் தேசிய இளைஞர் சம்மேளனத்தின் புதிய தலைவராக ஐந்தாவது முறையாகவும் கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் சிறுபான்மை சமூகத்தின் புத்தளம் மாவட்ட இளைஞர் குழு அங்கத்தவர் சனீர் சஜான் கடும் போட்டிக்கு மத்தியில் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)



