யானை தாக்கியதில் 51 வயது நபர் பலி..!
எப்பாவல பொலிஸ் பகுதிக்குட்பட்ட மகா இலுப்பள்ளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் (24) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மகா இலுப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என பொலிசார் தெரிவித்தனர்.
இவர் தனது வாழைத் தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானையை விரட்டுவதற்கு எத்தனித்த போது யானை தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)