மீராவோடை அல் ஹிதாயா சாதனை மாணவர்களுக்கு பிறைந்துறைச்சேனை சாதுலியாவில் மகத்தான வரவேற்பு..!
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய மாணவர்கள் கிரிக்கெட் சுற்றுத் தொடரில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மாகாண மட்ட ரீதியாக 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கு பற்றிய ஆறு ஓவர்கள் கொண்ட கடினப்பந்து சுற்றுத் தொடரில் அல் ஹிதாயா வித்தியாலய மாணவர்கள் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் முகமாக இன்று (25) வீதி ஊர்வலம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.சீ.எம்.அஜ்மீர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஊர்வலத்தின் போது சாதனை மாணவர்களுக்கு பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் மகத்தான வரவேற்பு மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் தலைமையில் இடம்பெற்ற இவ் வரவேற்பு நிகழ்வில் சாதனை மாணவர்களுக்கு பூமாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)



