உள்நாடு

பிறைந்துறைச்சேனை சாதுலியாவில் மாணவர் மாதிரிச் சந்தை..!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் மாணவர் மாதிரிச் சந்தை ஒன்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றது.

பாடத்திட்டத்திற்கமைய மாணவர்கள் மத்தியில் வியாபார நடவடிக்கைகளை செயல்முறை ரீதியாக தெரியப்படுத்த வேண்டி இந்த மாணவர் மாதிரிச் சந்தை அமைக்கப்பட்டிருந்தது.

குறித்த மாதிரிச் சந்தையில் ஒரு பிரதான சந்தையில் காணப்படும் அனைத்து விதமான பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பாடசாலை அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இச் சந்தை தொகுதியை பார்வையிட கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.தாஹிர் மற்றும் ஓட்டமாவடி தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக், வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அதிபர் எம்.பி.எம்.அன்வர், பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய அதிபர் எல்.ரீ.எம்.சாதிக்கீன், ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலய அதிபர் எஸ்.ஐ.எம்.சாதாத், வாழைச்சேனை ஹைராத் வித்தியாலய அதிபர் எஸ்.ஏ.எம்.றமீஸ், ஓட்டமாவடி ஸாகிரா வித்தியாலய அதிபர் ஏ.எம்.ஜாபிர் கரீம், அறபா நகர் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலய அதிபர் எம்.யூ.எம்.நளீம், பிறைந்துறைச்சேனை நூரியா ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.ஹுஸைன், பரகத் பள்ளிவாசல் தலைவர் எம்.ஆப்தீன், அல்ஹாஜ் எஸ்.எம்.செயினுதீன் ஜே.பி, பிஸ்தாமி ரவூப், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *