பரிசளிப்பும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், நூல் வெளியீட்டு விழாவும்
தர்கா நகர் இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்கா நகர் அல்ஹம்ரா, ஸாஹிரா, முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளிலும் கடந்த 2024 வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவித்து பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கும் வைபவமும், தேசபந்து ஸூஹைர் ஹாஜியார் எழுதிய ஹஜ் உம்ரா நூல் வெளியீட்டு விழாவும், எதிர்வரும் 03/08/ 2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணிக்கு தர்கா நகர் ஸாஹிரா கல்லூரி நளீம் ஹாஜியார் மண்டபத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வுக்கு தேசிய நல்லிணக்க பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள், கௌரவ அதிதிகளாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஹாஜியார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அம்ஜத் ஹாஜியார், முன்னாள் தேசிய மருந்தாக கூட்டுத்தாபனத் தலைவர் கலாநிதி ரூமி ஹாசிம், பேருவலைத் தொகுதி தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் அரூஸ் அஸாத் ஆகியோர்களும், விசேட அதிதிகளாக பேருவலை பிரதேச சபை தவிசாளர் பைஸான் நைஸர், பேருவலை நகர சபை தவிசாளர் மபாஸிம் அஸாஹிர், ஸாஹிரா மஹா வித்தியாலய அதிபர் நிஸ்ரின் அஸ்கர், ஓய்வு பெற்ற அதிபர் எம்,இஸட்,எம்,நயீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களுத்துறை மாவட்ட அமைப்பாளர் ஹசீப் மரிக்கார், ஆகியோர்களும் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர், பெற்றோர்கள் நலம் விரும்பிகள் கலந்து சிறப்பிக்க உள்ளதாக சங்கத்தின் செயலாளர் இப்ராஹிம் இம்ரான் தெரிவித்துக் கொள்கின்றார்.

(பேருவலை பீ.எம்.முக்தார்)