பலமுறை மழை பெய்யலாம்..!
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதேபோல், வடமேல் மாகாணத்தில் பல முறை மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைப்பகுதிகளின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், புத்தளம், திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 55-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மிதமான காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.